Arrambam Vimarsanam in Tamil

PUBLISHED DATE : 01/Nov/2013

Arrambam Vimarsanam in Tamil

ஆரம்பம்

கோவை ஆவி


இன்ட்ரோ

'தல' அஜித்தின் நடிப்பில் வந்திருக்கும் அதிரடி படம் இந்த ஆரம்பம்.  பிளாக் காமெடிகளும், மொக்கை காமெடிகளும் பார்த்து அலுத்துப் போயிருந்த நமக்கு ஆரம்பம் ஒரு ஆக்க்ஷன் ரிலீப். இந்த வருடத்தின் சிறந்த படம் இது என்று சொல்லுமளவிற்கு இல்லையென்றாலும் நல்ல ஒரு பிரச்னையை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை என்பதே சிறப்பு. 'தல' யின்  தீவிர ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் பல காட்சிகள் உள்ளது என்றாலும் அவை எதுவும் கதை ஓட்டத்திற்கு வெளியே செல்லவில்லை என்பது ஆறுதல். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் மட்டுமல்ல சிறப்பான நடிப்பையும் தனக்கே உரிய பாணியில் கொடுத்திருக்கிறார் நம்ம தல.

 

கதை  


காவல்துறை மற்றும் ராணுவத்தில் நடக்கும் ஊழல் மற்றும் அரசியலால் நண்பன் மற்றும் குடும்பத்தை இழந்த ஒருவன் அந்த மாபெரும் சக்திகளை எதிர்த்து எப்படி போராடி வெற்றி பெறுகிறார் என்பதே கதை. இதற்கு உதவ வரும் ஒரு டெக்கி (Techie), அவர் காதல்  என பயணிக்கிறது படம். சுபா  மற்றும் விஷ்ணுவர்தன் கைவண்ணத்தில் வசனங்களும் அருமை. பஞ்ச் டயலாக்குகளை மக்கள் ரசித்த காலம் கடந்துவிட்டது  என்பதை இயக்குனர்கள் உணரவேண்டிய தருணம் இது. ஹேக்கிங், கடத்தல் போன்ற ஓரிரு காட்சிகளை வைத்து ஹாலிவுட்டிலிருந்து சுட்ட படம் என்று முத்திரை குத்துவது அபத்தம்.

 

ஆக்க்ஷன் 


'தல' அறிமுகத்தில் ஆகட்டும், "டொக் டொக்" என சீரியஸ்ஸாக கொண்டு செல்வதாகட்டும், "டுகாட்டி" பைக்கில் அசத்தலாக ஓட்டுவதாகட்டும், ஆர்யாவிற்கு உரிய ஸ்பேஸ் கொடுத்து சில இடங்களில் அவருக்கு முக்கியத்துவம் தருவதாகட்டும், அஜித் ஈஸ் தி அல்டிமேட் ஸ்டார். ஆனாலும் இதுபோன்ற படங்களில் பாடல்கள் மட்டுமே ரிலீப் என்பதால் அதை இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் படமாக்கியிருக்கலாம். ( 'தல' ரசிகன் என்ற போதும் அவருடைய நடனம் அவ்வளவு ஈர்க்கும்படி இல்லை என்பது குறிப்பட வேண்டுமென நினைக்கிறேன்) அதே போல முதல் பகுதியில் ஆர்யாவின் காலேஜ், காதல் போன்றவை கதைக்கு தேவைப்பட்டாலும் திரைக்கதை தூங்கி வழிவது என்னவோ உண்மை. முதல் பாதியில் முதல் ஒரு மணி நேரம் ஸ்லோவாக செல்லும் ஸ்க்ரீன்ப்ளே அடுத்த ஒன்றரை மணிநேரம் ஸ்பீட் எடுத்து ஜெட் வேகத்தில் செல்கிறது. குறிப்பாக அஜித் அநாயாசமாக செய்திருக்கும் அந்த போட் காட்சிகள் மற்றும் காவலர்களிடமிருந்து தப்பி செல்லும் காட்சியும் மயிர் கூச்செறிய வைக்கிறது.


நயன்தாரா இனி அக்கா கேரக்டர்கள் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். நல்லவேளை அஜித்துக்கும் அவருக்கும் லவ் என்று ஒரு பிளாஷ்பேக் வருமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி தரவில்லை இயக்குனர். ஆர்யா திரையுலகின் 'ரோஹித் ஷர்மா', எப்பவாவது நடிக்கிறார். காதல் காட்சிகளில் அவர் என்ன முயன்றாலும் சிப்பு சிப்பா தான் வருகிறது. கிடைத்த பல நல்ல வாய்ப்புகளையும் வீணாக்குகிறார். குண்டாக இருப்பவர்களை கிண்டலடிக்கும் மட்டமான காமெடிகள் தவிர்த்திருக்கலாம். தாப்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கிஷோர் அதுல் குல்கர்னி அருமையான நடிப்பு. ராணா மாமிச மலையாக தெரிகிறார் 'தல' க்கு முன். நல்ல அறிமுகம். 17 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் சுமா ரங்கநாத் சிறப்பாய் செய்திருக்கிறார்.

 

இசை-இயக்கம்-தயாரிப்பு
ஏ.எம் ரத்னத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டம் தெரிகிறது. யுவனின் இசையில் இரண்டாம் பகுதி பின்னணி இசை தூள் பறக்கிறது. விஷ்ணுவர்த்தன் டச் மிஸ்ஸானது போன்ற உணர்வு. காமெடி மற்றும் படத்தின் திருப்புமுனையாய் இருக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை எக்ஸ்பிரஷனே இல்லாத ஆர்யாவுக்கு கொடுத்ததற்காக விஷ்ணுவுக்கு ஒரு கொட்டு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் நிறைவேற்றியதற்காக ஒரு ஷொட்டு..

 

ஆவியை டச் செய்த காட்சி/பாடல்


"என் ப்யுஸும் போச்சு" பாடல் அருமை. அஜித் "டுகாட்டி" பைக்கில் ரசிகர்ளின் விசில் ஒலிக்கு நடுவே பறப்பது அருமை. நல்ல கதை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக படமாக்கியிருக்கலாம் என்பது ஆவி என்னும் "தல" ரசிகனின் கருத்து. லாஜிக் பார்க்காத சினிமா ரசிகர்கள் ஒரு முறை நல்ல ஆடியோ செட்டப் உள்ள தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

 

ஆவி's Comments
Mass Hit-u No Doubt-u.
Related Links :
1. Arrambam User Rating

User Comments