நவீன சரஸ்வதி சபதம் பாடல் விமர்சனம்
கோவை ஆவீ
பெயர் சர்ச்சைக்கு பின் "நவீனத்தின்" துணை கொண்டு களமிறங்கியிருக்கும் காமெடி என்டர்டெயினர் இந்த சரஸ்வதி சபதம். ஜெய், VTV கணேஷ், நிவேதா தாமஸ் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை ப்ரேம் குமார்.
1. "காத்திருந்தாய் அன்பே" பாடல் முன்பே வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. "சின்மயி" யின் சொக்க வைக்கும் குரலில் மெல்லிய டூயட். இடையில் நிவாஸ் மற்றும் அபயின் குரல்கள் பாடலுக்கு மெருகேற்றுகிறது. "பூக்களை திறக்குது காற்று, புலன்களை திறக்குது காதல்" போன்ற வைரமுத்துவின் எழுத்துகள் ஆங்காங்கே மின்னுவது தெரிகிறது.
2. "சாட்டர்டே பீவர்" பாடல் விஜய் பிரகாஷ், சயனோர பிலிப்பின் குரலில் டிஸ்கோ பாடலாய் வலம் வருகிறது. "மதன் கார்க்கியின் ட்ரெண்டியான வார்த்தைகள் தற்போதைய இளைஞர்களின் அளவுக்கதிகமான "பார்ட்டி" கலாச்சாரத்தை பட்டியலிடுகிறது.
3. 'கானா' பாலா எழுதி, பாடியிருக்கும் "வாழ்க்கை ஒரு கோட்டை" என்ற தத்துவப் பாடல் வாழ்க்கை எந்த சூழலிலும் வாழலாம், வாழ்வதற்கு முயற்சி மட்டும் தான் தேவை என்று அறிவுரைக்கும் பாடல். " உழைச்சா தாண்டா நீ அம்பானி. இல்லேனா அம்போ நீ" போன்ற வரிகள் ரசிக்கும்படி உள்ளது.
4. வைரமுத்து எழுதிய "நெஞ்சாங்குழி ஏங்குதடி" பாடல் கார்த்திக்கின் கவர்ந்திழுக்கும் குரலிலும், மெல்லிய பின்னணி இசையிலும் மென் சோகத்துடன் நம்மை தாலாட்டி உறங்க வைக்கும். பூஜாவின் கணீர் குரல் பாடலுக்கு மெருகை கூட்டுகிறது.
5. "நெஞ்சாங்குழி ஏங்குதடி" பாடல் இரண்டாம் முறையாய் ஒலிக்கும் போது கார்த்திக்கின் குரலில் மட்டும் ஒலிக்கிறது. இரண்டில் எது படத்தில் இடம்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சரஸ்வதி சபதம் என்றதும் நம் கண் முன் தோன்றும் "கல்வியா, செல்வமா, வீரமா" பாடலை மறந்துவிட்டு கேளுங்கள்.
மதிப்பீடு - 6/10