Vairamuthu reveals Lingaa songs' lyrics
The audio of Lingaa is all set to release on November 16. The audio tracklist has been released today, meanwhile Lyricist Vairamuthu, who penned 4 songs for the album, has revealed two of the songs' lyrics.
Song #1 : ராஜா ராணி உடைகளில் ரஜினியும் - சோனாக்ஷி சின்ஹாவும் பாடும் பாடல்
பெண் : என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை – ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை
பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
பெண் : நூறு யானைகளின்
தந்தம் கொண்டு ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண் : தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ – நான்
பசிகாரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி
ஆண் : வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்றமன்னன் உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண் : சிற்றின்பம் தாண்டிப்
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா
ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டேன்
பெண் : அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
Song #2 : நன்மை செய்து துன்பம் பெற்ற ரஜினியின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லும் பாடல்
உண்மை ஒருநாள் வெல்லும் – இந்த
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்போல் வீசும் – ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் – அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
*
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர்யானை வீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
*
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது