Idhu Kadhirvelan Kadhal Songs Review

PUBLISHED DATE : 21/Jan/2014

Idhu Kadhirvelan Kadhal Songs Review

இது கதிர்வேலன் காதல் Music Review

by Kovai Aavee


1. கார்த்திக்கின் குரலில் "மேலே மேலே" பாடல் டீசர் வெளியான முதல் நாளிலிருந்து சர்ச்சைக்குள்ளான பாடல். முதல் இரண்டு வரிகள் "ஏலே கீச்சான்" மெட்டில் இருப்பதாக பேச்சு எழுந்தது.. ஆனால் இளமைத் துள்ளலுடன் வரும் இந்தப் பாடலை முழுதாய் கேட்பவர்கள் அதை மறந்து ரசிக்கத் தொடங்குவர்.

 

2. ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி பாடியிருக்கும் "அன்பே அன்பே"  மெல்லிய காதல் தாலாட்டு. முதல் முறை கேட்கும்போதே கால்கள் மெட்டுப்போட ஆரம்பிப்பதை தவிர்க்க முடியாது. ஆனந்த பூங்காற்றே படத்தில் வரும் செம்மீனா பாடல் ஆங்காங்கே தலைகாட்டி செல்கிறது.தாமரையின் வரிகள் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது..

 

3. "சர சர சரவெடி" - முதலில் கேட்ட மெட்டில் இருப்பதாக தோன்றினாலும், பாடல் சில முறை கேட்ட பிறகு பழகி விடுகிறது. KK, M.K. பாலாஜி மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி பாடியிருக்கும் இந்தப்பாடல் துருதுரு டூயட்டுடன், காதல் உணர்வை அழகாய் வெளிப்பட்டுத்தும் வரிகள் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

 

4. "விழியே விழியே"  - ஆலாப் ராஜூ அழகாய் வாசித்திருக்கும் காதல் ஹைக்கூ..இவர் காதலியை ரசித்து உருகும் போது காதலையே காதலிக்க தோன்றுகிறது.  பாடல் வரிகளுக்கு நடுவே மூச்சு விடும் பாணியை இந்த பாடலிலும் கடைப்பிடிக்கிறார். இந்த பாடலின் இனிமையான வரிகள் உங்களை நிச்சயம் தாலாட்டும்.

 

5. ஹாரிஸ் ஜெயராஜின் டெம்ப்ளேட் குத்துப்பாட்டு "பல்லக்கு தேவதையே"  -  இதற்கும் "வேணாம் மச்சான் வேணாம்" பாடலுக்கும் ஆறேழு வித்தியாசங்கள் மட்டுமே.. ஜெஸ்ஸி கிப்ட், வேல்முருகன், ஜெயமூர்த்தி கூட்டணியில் சி-சென்டர் ரசிகர்களுக்காக..

 

ஒரு சில பாடல்கள் தன் முந்தைய படங்களைப் போலவும், ஒரு பாடல் ரகுமானின் மெட்டிலும் இருப்பதாக தோன்றினாலும் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியும் திரும்பத் திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. "இது ஹாரிஸ் ஜெயராஜின் இசை" என்று சொல்லும்படியும் இருக்கிறது..

 

Rating - 6.5/10

பிடித்த பாடல்கள் - 1. விழியே விழியே,  2.அன்பே அன்பே

User Comments