Ivan Vera Maathiri Songs Review in Tamil

PUBLISHED DATE : 07/Nov/2013

Ivan Vera Maathiri Songs Review in Tamil

இவன் வேற மாதிரி பாடல் விமர்சனம்

கோவை ஆவி


யு டிவி மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் "எங்கேயும் எப்போதும்" புகழ் சரவணன் இயக்கியிருக்கும் படம். C.சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

 

1. "மலைய பொரட்டலெ"  ராக் ஸ்டைலில் அமைந்திருந்திருக்கும் இந்த பாடல் திப்பு, ஹைடி மற்றும் பிஸ்மாக் ஆகியோரின் குரல்களில் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க வரும் விக்ரம் பிரபுவுக்கு நல்ல அறிமுகப் பாடல். 

 

2.  "என்ன மறந்தேன்" என்று மதுஸ்ரீ காதல் வயப்பட்ட ஒரு பெண் தன்  காதலன் நினைவில் அவன் நினைவையன்றி மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டதாய் காதல் ரசம் சொட்ட தன் தேன்மதுர குரலில்  பாடியிருக்கும் பாடல் இனிமை.  தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் கவனித்திருந்தால் பாடல் இன்னும் மெருகு ஏறி இருக்கும். நா.முத்துகுமாரின் எழுத்துகள் மெல்லிசைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது.

 

3.  "ரங்கா ரங்கா" என்ற இளமைத் துள்ளும் பாடலை ரீட்டா பாடியிருக்கிறார். கொஞ்சம் "வத்திக்குச்சி" படப் பாடலை நினைவூட்டினாலும் சில முறை கேட்ட பின்பு பிடித்துப் போகிறது.

 

4. விவேகா எழுதிய "தனிமையிலே "  பாடல் தமிழ் சினிமா சமீப காலமாய் மறந்து விட்டிருந்த சோகப் பாடலை மீண்டும் ரசிகர்களுக்கு படைக்கிறது. பிரிந்து சென்ற காதலியின் நினைவில் நாயகன் பாடுவதாய் அமைந்த இந்த பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷன் உச்சஸ்தாயியில் பாடும் போது நம் மனதிலும் சோகம் ஒட்டிக் கொள்கிறது.சத்யாவின் வயலின் இசை சோகத்தை இன்னும் கூட்டுகிறது.

 

5.  "எங்கேயும் எப்போதும் " படத்தில் மாசமா ஆடி மாசமா பாடல் ஹிட் கொடுத்த தைரியத்தில் இதிலும் "லவ்வுல லவ்வுல "  என்று தொடங்கும் பாடல் பாடியிருக்கிறார் சத்யா. "எலும்பொடிஞ்சா மாவுக்கட்டு போட்டு திருத்த முடியும். இதயத்துக்கு மருந்து போடா காதலுக்கு தெரியும்"  போன்ற தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளிஷே வார்த்தைகளுடன் ஒலிக்கிறது இந்த பாடல்.

 

6. "இதுதானாஎன்று  ஒரு நிமிட பாடலை "புதியதோர் கவிதை செய்வோம் டீம்" எழுதியிருக்கிறார்கள். மனிதம் மனிதனுக்கு தேவை என்பதை பல்ராம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பாடுகிறார்.

 

"எங்கேயும் எப்போதும்" படப் பாடல் அளவிற்கு இல்லை என்றாலும் "இவன் வேற மாதிரி" பாடல்கள் நல்ல மாதிரி.

 

Rating - 6/10

User Comments