Salim Songs Review

PUBLISHED DATE : 08/Jun/2014

Salim Songs Review

சலீம் இசை விமர்சனம்
 கோவை ஆவீ

"நான்" படத்தின் ஆரவாரமில்லாத வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனி ஹீரோவாக தயாரித்து நடிக்கும் படம் "சலீம்". அவரே இசையமைத்திருக்கும்  பாடல்கள்  இயக்குனர்கள் கேயார், பாரதிராஜா பாலா மற்றும் பலர் முன்னிலையில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.


1. "Prayer" - புனித குர்-ஆனை இசைச் சேர்ப்புகளோடு  யூசுப் பாடியிருக்கிறார். குர்-ஆன், பகவத் கீதை போன்றவற்றை கமர்ஷியல் சினிமாக்களில் பயன்படுத்துவது மத வேறுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்கும் என்றாலும் இவற்றை எந்த ஒரு மதத்தவரும் மனம் கோணாதவாறு இயக்குனர் படமாக்குவாரா

 

2. "உன்னைக் கண்ட நாள் முதல்" - சுப்ரியா, ஹேமச்சந்திரா மற்றும் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் பாடல். கவிஞர் அண்ணாமலையின் காதல் வரிகளுக்கு டிரம்ஸ் இசை ஒரு பார்ட்டி ஸாங் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் "மக்காயலா"வில் இருந்த துள்ளல் மிஸ்ஸிங்..

 

3. "அவள நம்பித்தான்" - நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் 'சிவசம்போ' பாடலின் ரீ-மிக்ஸ். ஒரு சேஞ்சுக்கு இதில் கானா பாலா பாடல் மட்டும் எழுதிக் கொடுக்க அதை மகாலிங்கம் கிளாசிக் இசையின் வனப்பு சிறிதும் கெட்டு விடாமல் பாடியிருக்கிறார்.

 

4. 'என் உச்சி மண்டையில' டைப் குத்துப் பாட்டு இந்த "மஸ்காரா போட்டு".  சுப்ரியா, விஜய் ஆண்டனி மற்றும் ஷர்மிளா ஹை-பிட்ச்சில் கலக்கியிருக்கும் பாடல். FM ரேடியோவில் அடிக்கடி கேட்க போகும் பாடல் இது.

 

5. 'நான்' படத்தின் அதே தீம் மியுசிக்குடன் துவண்டு போன நாயகனை நிமிர்ந்து நிற்கச் செய்யும் பாடல் "உலகம் உன்னை". பிரபு பண்டாலா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுகையில் அரங்கில் உறங்கிப் போனவர்களும் எழுந்து அமர்வது உறுதி.

                           

மொத்தத்தில் மும்மொழிகளில் வெளியாகும் இந்த சலீம் இசை தமிழ் ரசிகர்களுக்கு ஹலீம் விருந்தாக அமையலாம்.

 

Rating - 6.5/10

User Comments