தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய "மரியாதை ராமண்ணா" சந்தானம் சோலோ ஹீரோவாக அறிமுகம் ஆகும் படமாக தமிழ் பேச வருகிறது. "இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
1. "டக்கரு டக்கரு" - இதுவரை காமெடியனாக நம்மை ரசிக்க வைத்த சந்தானம் ஸ்லிம்மாகி, புதிய லுக்குடன் கதாநாயகனாக அறிமுகமாகும் பாடல். உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை கூறும் அறிவுரை பாடல். சந்தானம் மாஸ் ஹீரொ மோகம் துளிர் விட்டு இருப்பது தெரிகிறது.
2. ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் இணைந்து பாடிய "ஓ ஓ நதிகள் ஓட" பாடல் ரயில் பயணத்தில் தனக்கு கிடைத்த தோழியுடன் நாயகன் பாடும் பாடலாய் வருகிறது. நா.முத்துகுமாரின் வரிகளுக்கு துள்ளல் இளமை இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.
3. தன் மனதுக்குப் பிடித்த தோழியின் அழகை நாயகன் வர்ணித்து பாடும் பாடல் இந்த "ஒற்றைத் தேவதை". கார்த்திக்கின் சுவையான குரலும் மதன் கார்க்கியின் அழகான எழுத்துகளும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றது. "இவள் பார்வை மின்சாரம். இவள் வார்த்தை ரீங்காரம்" போன்ற வரிகள் நம்மை முணுமுணுக்க வைக்கும்.
4. "செல்லக்குட்டி" - நண்பர்களின் காதலை இதுவரை ஊட்டி வளர்த்த நம்ம சந்தானம் முதன் முதலாக தனக்காக பாடப் போகும் டூயட். லலித் ஆனந்த் எழுதிய பாடலுக்கு ரஞ்சித் மற்றும் விஷ்ணுப்பிரியாவின் குரல்கள் தாளம் போட வைக்கிறது.
5. "வாடா பா மாப்பிள்ளை" - தெரியாமல் சென்று ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்ட நாயகன் தப்பிக்க வழியறியாமல் தவிக்கையில் ஒலிக்கும் பாடல். ஆனந்து பாடியிருக்கும் இந்த பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.
சித்தார்த் விபின் இசையில் "ஒற்றைத் தேவதை", "ஓ ஓ நதிகள் ஓட" பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
Rating - 5.5/10