நான் சிகப்பு மனிதன் - இசை விமர்சனம்
கோவை
ஆவி
பாண்டியநாடு கொடுத்த வெற்றிக் களிப்புடன் விஷால் அதே நாயகியுடன் களமிறங்கியிருக்கும் படம். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்க, ஜீ.வீ. பிரகாஷ் இசையில் சோனி ம்யுசிக் வெளியீடாக பாடல்கள் வெளிவந்துள்ளது.
1. "பெண்ணே ஓ பெண்ணே" - ரம்மி படத்தில் "கூட மேல கூட வச்சு" பாடலைப் பாடி அசத்திய வந்தனா ஸ்ரீநிவாசன் மற்றும் அல்-ருபியான் பாடியிருக்கும் பாடல். விசில் ஒலியுடன் துவங்கி நம்மை தாளம் போடவைக்கும் டூயட் பாடல்.
2. "லவ்லி லேடிஸ்" பாடல் டிஸ்கோ பாடலை போல ஆரம்பித்து தத்துவ பாடலாக மாறி விடுகிறது. திரைப்படங்களில் இப்போது "ஜெயப்பிரகாஷ்" தோன்றினாலே வேறு ஆளே இல்லையா என்று மக்கள் சலித்துக் கொள்வது போல் பாடல்களில் கானா பாலா வந்தாலே கொஞ்சம் "டரியல்" ஆகிறது. கானா பாலா, ஜீ.வி, விஜயபிரகாஷ், ஆர்யன் தினேஷ், மெகா என ஒரு மெகா கூட்டணி பாடியிருக்கிறது. இதில் மேகாவின் குரல் மட்டும் கொஞ்சம் ஆறுதல்.
3. "ஆடு மச்சி" (ரீமிக்ஸ்)- விஜய் சாவ்லாவின் DJ மிக்ஸுடன் அதே லவ்லி லேடிஸ் பாடலை இசையின் டெம்போவை அதிகப்படுத்தி "பார்ட்டி சாங்" வகையறாவாக வரும்போது கொஞ்சம் கேட்கப் பிடிக்கிறது..
4. காதல் தந்த சோகம் நீங்க காதலியின் பார்வை ஒன்றே தான் ஒரே மருந்து என காதல் தம்பதிகள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி உருகி உருகி பாடியிருக்கும் பாடல் "இதயம் உன்னை தேடுதே".
"இறைவா..! ஓர் வரம் கொடு, இவன் எந்தன் மகனாகவே..
தினம்தோறும் அழவிடு, தாயாகி தாலாட்டவே.."
என்று காதலனை மகனாய் பாவித்து பாடும் வரிகள் உணர்வுப்பூர்வமானவை.
5. ஜி.வீ. பிரகாஷ், மேகா மற்றும் குழுவினர் பாடியிருக்கும் "ஏலேலோ"இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என்று பன்முகம் கொண்ட கலைஞராக அவதாரம் எடுத்து வருகிறார் ஜீ,வீ. பிரகாஷ்.
மொத்தத்தில்
மனதில் "பச்சக்" என்று ஒட்டிக்கொள்ளும்படி ஒரு பாடல் மட்டுமே. நான் சிகப்பு மனிதன் - உக்கிரம் குறைவு!
Rating : 6/10
Related Links : RajiniKanth Launches Naan Sigappu Manithan Audio