ஜில்லா (Music Review)
கோவை ஆவி
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் ஜில்லா. டி.இமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு இங்கு பார்ப்போம்.
1. "எப்ப மாமா ட்ரீட்டு" - இமான், பூஜா மற்றும் ஸ்னிக்தா குரலில் பார்ட்டி சாங் போல் இருக்கிறது. பாடல் வரிகள் சுமார் ரகம். ஆனால், படமாக்கும் விதத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
2. இளையதளபதி விஜய், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கும் டூயட் பாடல் "கண்டாங்கி கண்டாங்கி" முதல் முறை கேட்கும் போதே பிடித்து போகிறது.விஜய் முன்பே பல பாடல்கள் பாடியிருந்தாலும் இதில் ஒரு தேர்ந்த பாடகரை போல் பாடியிருப்பது இன்னும் சிறப்பு. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.
3. "ஜில்லா Theme" - வழக்கமான நாயகன் புகழ் பாடும் பாடல். மோகன்லாலுக்கும் சேர்த்து போட்டதாலோ என்னவோ ஆங்காங்கே செண்டை மேளம் கொட்டி மலையாள வாடையுடன் வாசித்திருக்கிறார் இமான். எப்பவும் போல விஜயின் இந்த அறிமுகப் பாடலையும் எழுதியிருப்பது கவிஞர் விவேகா தான்!
4. " வெரசா போகையில" - பார்வதி எழுதியிருக்கும் இந்தப் பாடலையும் இமான் தான் பாடியிருக்கிறார். மறுபடியும் கேட்க தூண்டும் இனிமையான பாடல். இம்மான் பாடிய விதம் "கும்கி" பாடலை மீண்டும் கேட்பது போன்றிருந்தாலும் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
5. சுனிதி சவ்ஹான் ரஞ்சித்துடன் இணைந்து பாடியிருக்கும் குத்து பாடல் "ஜிங்குனமணி". தாளம் போட வைக்கும் இசை கண்டிப்பாக சி சென்டர் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்.
6. சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் ஷங்கர் மகாதேவனும், 'நம்ம' SPB யும் பாடியிருக்கும் பாடல் "பாட்டு ஒண்ணு". விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து திரையில் தோன்றும் பாடல் இது.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா,
எதிர்க்க நின்னா எவனும் தூசுடா"
எனும் வரிகள் நிச்சயம் இளைய தளபதி ரசிகர்களுக்கும், கேரளத்து ரசிகர்களுக்கும் நெகிழ வைக்கும் விருந்தாக அமையும்.
தன் தனித்துவமான இசையால் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை படைக்கும் இமான் இதிலும் அசத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள்!
Rating - 6.5/10