ஆல் இன் ஆல் அழகுராஜா - இசை விமர்சனம்
கோவை ஆவி
"OKOK" இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி , காஜல் நடித்து வெளிவரும் இப்படத்திற்கு இசை தமன். இந்த ஆல்பமும் வழக்கமான ராஜேஷ் படங்களின் இலக்கணத்துடன் வெளிவந்திருக்கிறது.
1. "ஆல் இன் ஆல் " என்று தொடங்கும் டைட்டில் பாடலில் பெல்லிராஜ் மற்றும் குழுவினரின் அதிரடி அதகளம் தெரிகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் பாடல் போல சாயல் தோன்றினாலும் அறிமுகப் பாடலுக்கு ஏற்ற துள்ளல் இசை.
2. "என் செல்லம்" பாடல் "என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்" பாடல் மெட்டில் ஆரம்பித்து மெலடி மெட்டாய் நம் காதுகளை வருடுகிறது. ஒரு பெண்ணை வர்ணிக்கும் இந்தப் பாடல் இளைஞர்கள் விருப்பப் பாடலாகப் போவது உறுதி.
3. "உன்னை பார்த்த நேரம்" பாடல் விஜய் ஏசுதாசின் குரலில் எண்பதுகளின் மெட்டில் இளையராஜா ரக டூயட். இது இனி எல்லா தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்கலாம்.
4. "யம்மா, யம்மா" பாடல் கமெர்ஷியல் குத்து. சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரலில் தாளம் போட வைக்கும் ஐட்டம் நம்பர்.
5. ஜாவேத் அலி தன் மென்குரலில் பாடிய "ஒரே ஒரு வரம் " பாடல் "மாங்கல்யம் தந்துனானே" என்று ஆரம்பித்து தன் காதல் உணர்வை சொல்லும் பாடல். உன்னைப் பார்த்த நேரம் பாடலின் சாயல் தெளிக்கப் பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் பாடல் இது.
ஆல் இன் ஆல் அழகுராஜா பாடல்கள் இதற்குமுன் வெளியான டைரெக்டர் ராஜேஷ் படப்பாடல்கள் (OKOK, BEB, SMS) அளவுக்கு வெற்றி பெறுவது சந்தேகம்.
Rating - 5.5/10