எதிலும் ஒரு வித்தியாசத்தை புகுத்துவது இயக்குனர் பார்த்திபனின் வாடிக்கை. தான் நடிக்காமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யும் படத்தின் பெயர் மட்டுமல்ல, பாடல்களிலும் சில வித்தியாசங்களை புகுத்தியுள்ளார். படத்தின் நான்கு பாடல்களை நான்கு இசையமைப்பாளர்கள் ஆளுக்கொரு பாடலை இசையமைத்திருப்பது புதுமை.
1. "காற்றில் கதை இருக்கு" - நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கூட எவ்வளவோ கதைகள் உள்ளன என்பதை கூறும் பாடல். அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துப் பாடியிருக்கும் அறிமுகப் பாடல். மதன் கார்க்கியின் எழுத்துகளை இவருடன் ரீட்டா ஹை-பிட்சில் பாடுகையில் நமக்கு நா வறண்டு போகிறது.
2. கோலிவுட்டின் காதல் ஜோடி ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியிருக்கும் டூயட் "பெண் மேகம் போலவே". சரத்தின் வீணை மீட்டல்களும், காதல் ரசம் சொட்டும் நா.முத்துக்குமாரின் வரிகளும் இன்னிசை தேனமுது. மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம்.
3. "ஏ For அழகிருக்கு" - நடிகை சிம்ரன் பாடுவதாக கூறப்பட்ட இந்த பாடல் பின் சில காரணங்களால் NSK ரம்யாவின் குரலில் ஐட்டம் நம்பராக ஒலிக்கிறது. விஜய் ஆண்டனியின் இசை பாடலுக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.
4. வாழ்வின் அந்தந்த கணங்களை வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதை "Live the moment" பாடலில் பாடம் புகட்டுகிறார்கள் ஹரிசரண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, நகுல் மற்றும் சாந்தனு குழுவினர். இந்தப் பாடல் தமனின் கை கீபோர்ட்வண்ணமாக வந்திருக்கிறது.
ஜீவியின் டூயட் பாடலை தவிர மற்ற பாடல்கள் படத்துடன் பார்த்து ரசிக்கும்படி தான் அமைந்திருக்கிறது.
Rating - 6/10