தெனாலி ராமன் இசை விமர்சனம் (Thenali Raman Songs Review)
கோவை ஆவி
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு நடிக்கும் படம். சிம்புதேவனின் புலிகேசி கைகொடுத்தது போல் இந்தப் படமும் கைகொடுக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இமானின் இசையில் வெளிவந்திருக்கும் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்போம்..
1. விவேகாவின் வரிகளை ஸ்ரேயா கோஷல் கொஞ்சி கொஞ்சி பாடியிருக்கும் பாடல "ஆணழகு". தெனாலிராமனின் ரோமென்ஸ் பாடல் ஒன்றிரண்டு முறை கேட்டலுக்கு பின் நமக்கு பிடித்துப் போகிறது..
2. "ஏய் வாயாடி" கிருஷ்ணராஜ் பாடியிருக்கும் பாடல். ஆணவம் நிறைந்த அந்தக் கால நீலாம்பரியை நோக்கி தெனாலிராமன் பாடுவதாக வரும் பாடல். ஜாலியான கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கிருஷ்ணராஜின் குரலில் ஆங்காங்கே புஷ்பவனம் குப்புசாமி எட்டிப் பார்க்கிறார்..
3. ஆண்ட்ரியாவின் மெஸ்மரிக்கும் குரலில் "உடல் வாங்கலையோ உடல்" அந்தக்கால "ஐட்டம்-நம்பர்" ஆக வருகிறது. சரித்திர படம் ஒன்றிற்கு ஆண்ட்ரியாவின் குரல் பொருத்தமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
4. புலவர் புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் "ரம்பப்பா ரம்பப்பா" பாடல் தெனாலிராமனின் திறமைகளை தானே பட்டியலிடும் பாடலாய் ஒலிக்கிறது. முகேஷின் குரல் பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.
5. "நெஞ்சே நெஞ்சே" பாடல் ஹரிஹரசுதன் வாய்சில் கொஞ்சம் சோகத்துடன் இசைக்கிறது. துவண்டு போன ஒருவனுக்கு ஆறுதல் சொல்லும் பாடல்.
மொத்தத்தில்
இமானின் இசை மட்டுமே சரித்திர படம் என்பதை உணர்த்துகிறது. பாடல் வரிகளும், பாடகர்கள் குரலும் புதுமை கலந்து இருப்பதால் புதுமைப் பித்தனின் பாடலை தவிர மற்ற பாடல்கள் அந்தக் கால உணர்வை நமக்கு கொடுக்கவில்லை.
Rating - 4.5/10