<

Cuckoo Songs Review

PUBLISHED DATE | 20/Feb/2014

Cuckoo Music Review

கோவை ஆவீ 


எழுத்தாளர் ராஜு முருகன் இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் குக்கூ.. படத்தின் டிரெயிலர் பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில் அதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

 

 

1. "கல்யாணமாம் கல்யாணம்" - நேசித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் வேளையில் அவளை காதலித்தவனின் நிலையை நாதஸ்வர மேளத்துடன் ஆண்டனி பாடுகையில் காதல் தோல்வியுற்ற அனைவருக்கும் ஒருமுறை தம் வாழ்வின் பிளாஷ்பேக் ஒரு நிமிடம் நிச்சயம் வந்து போகும்..

 

 

2.   கானா பாலா, சதீஷ் பாடியிருக்கும் "ஏண்டா மாப்ளே" பாடல் வழக்கமான தத்துவப் பாடல். தொடர்ந்து இதே போன்ற 'கானா' வை  கானா  பாலா பாடுவதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஆயினும் சந்தோஷ் நாராயணின் இசையில் இதுபோன்ற ஒரு பாடலை கேட்பது வித்தியாசமான உணர்வை தருகிறது.

 

 

3. வைக்கம் விஜயலக்ஷ்மியின் நாட்டுப்புற குரலில் வித்தியாசமான காதல் பாடல் "கோடையில  மழை போல" இடையே ஒலிக்கும் பிரதீப்பின் குரல் பாடலின் அழகை மெருகேற்றுகிறது.

 

 "மாறிடும் யாவுமென்று சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை,  உண்மைக் காதலைப் பொறுத்த மட்டில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை  ஆசைகள் தீருமட்டும் கொள்ளும் அன்பினில் அழகு இல்லை வெந்து போகிற வேளையிலும் அன்பு தீயென்றும் அணைவதில்லை "


என்பவை காதலின் சிறப்பை அழகுற சொல்லும் வரிகள்.. 


                   

4. "மனசுல சூறைக்காத்து" திவ்யா ரமணி மற்றும் RR பாடியிருக்கும் பாடல்.. திவ்யா ரமணியின் குரல் அனுராதா ஸ்ரீராமின் சாயலில் இருக்கிறது.. மிகவும் மெல்லிய இசைத் தாலாட்டு. சந்தோஷ் நாராயணின் முத்திரை ஆங்காங்கே உணர முடிகிறது.



5. RR பாடியிருக்கும்  "பொட்டப்புள்ள"  நம்மையும் அறியாமல் தாளம் போட வைக்கும் பாடல். காதல் வந்தால் Common Man-உம் கண்ணதாசனே என்பதை உணர்த்தும் வரிகள்.. Flute மற்றும் வயலின் இசை மனதிற்கு இதம் சேர்க்கிறது.



6. "ஆகாசத்த நான் பாக்குறேன்" - High Definition கனவுகள் காணும் உலகில் கண் பார்வையற்ற இரு காதல் பறவைகள் மனதால் உலகை காணும் அழகிய கவிதை. கல்யாணி நாயர் மற்றும் பிரதீப்பின் குரல்கள் பாடலுக்கு உயிரூட்டுகிறது.



மொத்தத்தில் 


 

குக்கூ -  காதல் ஸ்வரம் பாடும் குயில்...!

Album Rating : 8/10


;