<

Aaha Kalyanam Songs Review

PUBLISHED DATE | 28/Jan/2014

"ஆஹா கல்யாணம்" (Music Review)

 கோவை ஆவி

 


 

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் இசையும், நாயகி அனுஷ்கா ஷர்மாவும். தமிழில் "நான் ஈ"  புகழ் நானி நடித்து வெளிவர இருக்கிறது. இதன் பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா? 

 

1. "மழையின் சாரலில்" -  தாமரையின் "திகட்டாத" தமிழ் வரிகள்,  நரேஷ் ஐயர், ஸ்வேதா மேனன் பாடும் இந்த பாடலை கேட்கும்போதே டூயட்டை திரையில் காணும் ஆவல் எழுகிறது. 

 

2. கிடார் இசையுடன் துவங்கும் "பாதியே என் பாதியே" பாடல் இடையில் வயலின் வாசிப்புடன் இனிமையோடும் அதே சமயம் பிரிவின் வலியை அழுத்ததோடும் ஒலிக்கும் பாடல். சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் ஒரு பாதியும்,  அபயின் குரலில் மறு பாதியும் ஒலிக்கிறது.

 

3. "The Punch Song" - போடா போடியில் வரும் குத்து சாங் மெட்டை போலவே வரும் பாடல்.. மானசி, நிவாஸ் குரலில் டி.ஆர், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் பன்ச் டயலாக்குகளை ஒன்று சேர்த்து பாடலாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் இரைச்சல் அதிகம் என்றாலும் முன்வரிசை ரசிகர்கள் நடனமாட ஏதுவான பாடல்.

 

4. "Bon Bon" - ஹரிசரண் சுனிதி சவ்ஹான் பாடியிருக்கும் துள்ளல் பாங்க்ரா.. பாடலில் ஆங்காங்கே  வடக்கத்திய சாயல் தெரிகிறது. தரணின் இசை மேலாண்மை "ஆஹா" போட வைக்கிறது.

 

5. "ஹனியே ஹனியே" பாடல் ஆல்பத்தின் "மெல்லிசை சரவெடி".. நரேஷ் ஐயரின் குரலிலும் பின்னர் அதே பாடல் சுப்ரியாவின் குரலிலும் வருகிறது.. இனி வரும் சில நாட்களுக்கு தொலைக்காட்சியில் அடிக்கடி இடம் பிடிக்கப் போகும் பாடல் இதுவாகத்தான் இருக்கும். 

 

6. சின்மயியின் தித்திக்கும் குரலில் "கத கத" பாடல் காதல் அரும்பிய பெண்ணின் உணர்வுகளை சொல்லும் பாடல். வயலின், மத்தளம் என இசையின் ஆதிக்கம் நிறைந்த துடிதுடிப்பான பாடல் 

 

7. "கூட்டாளி கூட்டாளி" பாடல் பென்னி தயாள் மற்றும் உஷா உதூப்பின் குரல்களில் தாளம் போட வைக்கும் பாடல். ஹை-பிட்ச்சில் இருவரும் பாடுவதை கேட்கையில் மனதில் உற்சாகம் தோன்றும்..      

 

போடா-போடி  படத்திற்கு பின் இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்திருக்கும் படம் இது. சில பாடல்கள ஆங்காங்கே  வடக்கத்திய சாயல் தெரிகிறதுஇவரது முந்தைய படங்களின் சாயல்களில் இருந்தாலும் ஒரிஜினல் (ஹிந்தி) பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அதே சமயம் தமிழ் ரசிகர்களை கவரும்படி இருக்கிறது.

 

Rating - 6/10


;