<

Un Samayal Arayil Songs Review - Ilaiyaraja 80s

PUBLISHED DATE | 16/Apr/2014

மலையாளத்தில் 'சால்ட் அண்ட் பெப்பர்' என்ற பெயரில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்ற படம் இப்போது இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் உன் சமையலறையில் என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.. இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருக்கிறார்..

 

1.  "இந்தப் பொறப்புத்தான்" - மனிதனின் பிறப்பே நல்ல உணவுகளை சுவைத்து ரசித்து சாப்பிடவே என்பதை 'சுவைபட' பாடியிருக்கிறார் வெண்கலக் குரலோன் கைலாஷ் கேர். மதுர மல்லி இட்லி, மீன் கொழம்பு, திண்டுக்கல் பிரியாணி, தென்காசி பரோட்டா, சிக்கன் கறி, கொழுக்கட்டை, சுக்குமல்லி காபி  என்று இவர் ஒவ்வொரு ஐட்டமாக பாடும்போதே நமக்கும் அவற்றை சுவைக்க தோன்றுகிறது. ஆனால், கைலாஷ் கேர்  தமிழ் வார்த்தைகளை கடிச்சி உமிழ்கிறார். 

 

2. ராகதேவனின் தேன் குரலில் "காற்று வெளியில்" பாடல் பக்குவப்பட்ட இருவருக்குள் உண்டாகும் சிநேகத்தின் வெளிப்பாடாய் ஒலிக்கிறது. இதுவரை கண்டிராத தோழியின் நினைவில் உருகித் தவிக்கும் நாயகனின் உணர்வை பிரதிபலிக்கும் பாடல். 

 

3. "தெரிந்தோ தெரியாமலோ" - எண்பதுகளின் எஸ்.பி.பி போல இன்றைய தலைமுறையில் வசீகரிக்கும் குரலுடைய கார்த்திக் மற்றும் NS கிருஷ்ணனின் பேத்தி ரம்யாவும் பாடியிருக்கும் டூயட். அக்னி நட்சத்திரம் காலத்து இசை கேட்பது போன்ற சாயல். 

 

4. ரஞ்சித் மற்றும் விபாவரி பாடியிருக்கும் மற்றுமொரு டூயட் "ஈரமாய் ஈரமாய்". பழனிபாரதியின் இளமை துள்ளும் வரிகளுக்கு ரஞ்சித்தின் குரல் அம்சமாய் பொருந்தியிருக்கிறது. விபாவரி வடக்கிலிருந்து தமிழுக்கு கிடைத்த  இன்னொரு ஸ்ரேயா கோஷல்?

 

இசைஞானி மீண்டும் ஒருமுறை நமக்கு எண்பதுகளின் இசையை படைத்திருக்கிறார். மொத்தத்தில், உன் சமையலறையில் வாசம் மணக்கிறது.

 

Rating - 6/10


;