<

GV Prakash Saivam Songs Review

PUBLISHED DATE | 08/Apr/2014

சைவம் இசை விமர்சனம்
கோவை ஆவி

இளம் தலைமுறை நடிகரகளான விக்ரம், அஜித், விஜய், ஆர்யா போன்ற நடிகர்களை வைத்து வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குனர் A.L.விஜய் முதல் முறையாக பெரிய ஹீரோக்கள் இல்லாமல் நாசர் மற்றும் "தெய்வத்திருமகள்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சாரா ஆகியோரை மட்டும் வைத்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த சைவம். விஜயின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

 

1. "அழகு" - பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பிஞ்சுக் குரலில் அழகுகளை அழகாக பாடியிருக்கும் பாடல். ஜதிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்.

 

"நதி நடந்தே சென்றிட வழித்துணை தான் தேவையா?
கடலலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு..
கவலை யாதும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு..!"

 

போன்ற வரிகளை உத்ராவின் அழகான குரலில் கேட்கையில் அழகோ அழகு..

 

2. ஹரிச்சரண் பாடியிருக்கும்  "ஒரே ஒரு ஊரில்"  பாடல் அன்பையும் பாசத்தையும் தமிழ் வரிகளில் இசைக்கிறது. மெல்லிய இசைக் கோர்ப்பும், ஹரிச்சரனின் பொருத்தமான குரலும் பாடலை மெருகேற்றுகின்றன.

 

3. "கொக்கர கோழி" பாடல் சின்னப்பொண்ணு, கானா பாலா, அஸ்விதா, ஹரிஷ் மற்றும் ஐஸ்வரியா பாடியிருக்கும் பாடல்.. ஓடிப் போன கோழியை தேடிச் செல்கையில் வரும் பாடலாக வருகிறது. துடிப்பான இசை நம்மையும் கோழி பிடிக்க அழைத்து செல்கிறது.

 

மொத்தத்தில்
மூன்றே பாடல்களை கொண்டிருந்தாலும் முத்தான ஆல்பம் இது. சைவம் "அசைவர்" களுக்கும் பிடிக்கும்..!

 

Rating - 6/10

 

Related Link:

Critic Rating: 3/5


;