மான் கராத்தே (Music Review)
கோவை ஆவி
எதிர்நீச்சல் வெற்றிக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணி இணைந்திருக்கும் படம். ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுத திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ சனியன்று டைரக்டர் ஷங்கர் வெளியிட "தேனிசைத் தென்றல்" தேவா பெற்றுக் கொண்டார்.
1. "டார்லிங் டம்பக்கு" - பாட்டின் முதல் வார்த்தையை போலவே பாடலும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. யுகபாரதியின் வரிகளை உற்சாகத்துடன் பென்னி தயாள் மற்றும் சுனிதி சவ்ஹான் பாடியிருக்கிறார்கள். படத்தில் ஹன்சிகாவின் அருமையான நடன அசைவுகளை இந்த பாடலுக்கு எதிர்பார்க்கலாம்.
2. அனிருத் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியிருக்கும் டூயட் "உன் விழிகளில்" உற்சாக டானிக். கிராம பாடல், குடி, குத்து, கூத்து பாடல் நடுவே மெல்லிய தென்றலாய் ஒலிக்கும் பாடல். வயலின் வாத்தியத்திற்கு நடுவே RD ராஜாவின் எழுத்துகள் பளிச்சிடுகின்றன.
3. சென்ஸார் செய்யப்பட்ட வார்த்தைகளை கொண்டு துவங்கும் இந்த "ராயபுரம் பீட்டர்" பாடலை பாடியிருப்பது சாட்சாத் சிவகார்த்திகேயனேதான். பறவை முனியம்மா மற்றும் தமிழரசனுடன் சேர்ந்தது குத்தியிருக்கும் லோக்கல் குத்துப்பாட்டு.
4. "ஒப்பன் த டாஸ்மாக்" குடிமகன்களின் புகழ் பாடும் பாடல் அனிருத் மற்றும் தேவாவின் குரலில் ஒலிக்கிறது. இந்த கவித்துவமான பாடலை எழுதியிருப்பவர் "நம்ம" கானா பாலா. கவுண்டமணியின் "ஐயம் வெரி ஹேப்பி" டயலாக்குடன் முடிகிறது.
"டாஸ்மாக்" என்கிற சொல் வசனம், பாடல் காட்சி அல்லது திரையில் காண்பிக்க பட்டால், censor board கத்தரி போட்டு விடுவார்கள். இந்த பாடல் எவ்வளவு கண்டதுண்டமாக்க போகிறார்களோ என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
5. மதன் கார்க்கி எழுதியிருக்கும் "மாஞ்சா" பாடலை அனிருத் தன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். மற்ற பாடகர்களுக்கும் சான்ஸ் கொடுங்க பாஸ்!
இளமைத் துள்ளலோடு டார்லிங் பாடலும், மெல்லிய "உன் விழிகள்"., "ராயபுரம் பீட்டர்", "ஒப்பன் த டாஸ்மாக்" குத்துபாட்டு என பல ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. மொத்தத்தில் மான் கராத்தே - Brown Belt.
Rating - 6.5/10