<

Jigarthanda Songs Review

PUBLISHED DATE | 06/Mar/2014

ஜிகர்தண்டா - இசை விமர்சனம் 
 கோவை ஆவீ 

பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இரண்டாவது படைப்பு. சித்தார்த் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் விரைவில் வர இருக்கும் படம் இது. வளர்ந்து வரும் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயண் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வழக்கமான பட இசையிலிருந்து விலகி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

 

1. Baby -  சந்தோஷ் நாராயண் சொந்தக் குரலில் பாடியிருக்கும் இந்த பாடல் கொஞ்சம் பீட்சாவில் வரும் "எங்கோ ஓடுகின்றாய்" பாடல் சாயலில் கொஞ்சம் இருந்தாலும் துள்ளலோடு கேட்க வைக்கிறது. எழுபதுகளில் வெளிவந்த பாப் பாடல்களை நினைவு படுத்துகிறது.

 

2. பாண்டி நாட்டு கொடி - ஒப்பாரியுடன் ஆரம்பித்து நாயகனின் வீரத்தை பறைசாற்றும் பாடல். ஆண்டனி தாசன் குரலில் இசையின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் உற்சாக உணர்வை தூண்டும் பாடல்.

 

3. ஜிகர் - தண்டா Theme Music - கேங்க்ஸ்டர் படங்களுக்குரிய தீம் இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுகின்றது.

 

4. மீனாட்சி ஐயரின் தாலாட்டும் குரலில் "தெசையும் எழந்தேனே" மெல்லிய சோகம் ஒலிக்கும் பாடல். 

 

5. அருண் ராஜா மற்றும் மோசஸ் மிரட்டும் மற்றுமொரு அடியாட்களின் பின்புலத்தை விளக்கும் பாடல் வரிகளுடன் "டிங் டாங்" திரையில் பார்க்கும் போது நம்மை அசத்தலாம்.  

 

6. ஹூ-ஹா என்ற இரண்டெழுத்தை மட்டும் வைத்து இசை மாலை கோர்த்திருக்கிறார்.
 

 

7. "கண்ணம்மா" இந்த ஆல்பத்தில் பாடல் வகையறா என்று நாம் சொல்லக் கூடிய ஒரே பாடல் இதுதான். ரீட்டா மற்றும் ஆண்டனி தாசன் பாடியிருக்கும் பாடல் அவ்வளவாய் ஈர்க்கவில்லை என்றபோதும் இசை நம்மை இந்தப் பாடலை முணுமுணுக்க வைக்கிறது.

 

8. "ஓட்டம்" - படத்தின் "ஓட்டத்திற்கு" உதவும்  சந்தோஷ் நாராயணின் ஜாஸ் வகை இசைக் கோர்வை. 

 

இப்படத்தின் இசை கேட்பதற்கு வித்தியாசமாகவும் அதே சமயம் புதியதோர் முயற்சியாகவும் இருக்கிறது. ஆயினும் "பீட்சா" படத்தை போலவே ஒரே ஒரு பாடலை தவிர மற்ற எல்லா டிராக்குகளும் ஹாலிவுட் படங்களில் வருவது போல இசையோடு இழைந்து வருவதால் ஒரு பாடல் கேட்கும் சுகம் இல்லை. இசைத்தட்டை விலை கொடுத்து வாங்கும் சராசரி இசை ரசிகனுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே..!

 

மொத்தத்தில் 

ஜிகர்தண்டா- திரைப்படம் எனும் கோப்பையில் ஊற்றும் போது சுவை கூடலாம்!!
Rating: 6/10


;