பாண்டிய நாடு பாடல் விமர்சனம்
by கோவை ஆவி
இமான் இசையில் விஷால், லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவர இருக்கும் பாண்டிய நாடு இசை வெளியிட பட்டது. இம்மானின் 'மைனா'வில் தொடங்கிய நல்ல 'form' பாண்டிய நாட்டிலும் தொடர்கிறது.
1. "ஏலே ஏலே மருது" பாடல் வைரமுத்துவின் வைர வரிகளுடன் சூரஜ் சந்தோஷின் குரலில் ரசிக்கும் மெட்டில் ஒலிக்கிறது. இமானின் வழக்கமான டச் தெரிகிறது.
2. "டையாரே டையாரே" பாடலில் கிராமத்து மணம் கமழ்கிறது. இறப்பை கூட மகிழ்வாய் பாடும் முரண் ரசிக்க வைக்கிறது. "ஆதிசேஷன் கொத்த வந்தா ஆவின் பால் வைப்பாரு" போன்ற வரிகள் நையாண்டியுடன் அமைந்திருக்கிறது.
3. "பை பை கலாய்ச்சிபை" ரம்யா நம்பீசன் பாடகராக அறிமுகம் ஆகும் இந்தப் பாடல் மதன் கார்க்கியின் வரிகளில் ஒரு பெண் ஒரு ஆணை கவர வேண்டி பாடும் பாடலாக அமைந்திருக்கிறது.
4. " வெறி கொண்ட புலி ஒன்று" பாடல் உணர்ச்சிமயமான பாடல்..ஆங்காங்கே ஆறடி காற்றையும், யாரென்று தெரிகிறதா பாடலையும் நினைவு படுத்துகிறது.
5. "ஒத்தக்கடை மச்சான் " ஹரிஹரசுதன், சூரஜ் பாடியிருக்கும் குத்து பாட்டு. வைரமுத்துவின் வரிகள் என்பதை நம்பமுடியவில்லை. பாடல் 'Hit' ஆவது உறுதி
பிடித்த பாடல்கள் :
"ஏலே ஏலே மருது", "ஒத்தக்கடை மச்சான்", "டையாரே" ஆகிய மூன்று பாடல்களும் இரண்டு மூன்று முறை கேட்டபின்பு பிடித்துப் போகிறது. மொத்தத்தில், பாண்டிய நாடு இசைச் செழுமை.
பின்குறிப்பு: பிடித்த வரிகள் -
ஒரு மெல்லிய வேகமா போகிறாள்...
அந்த மீனாக்ஷி கிளி இவளோ...
ஒரு மின்னலின் பிள்ளையா பார்க்கிறான்...
அவள் என் தாயின் மருமகளோ!
Album Rating - 7/10