Irumbu Kuthirai Songs Review

PUBLISHED DATE : 14/Aug/2014

Irumbu Kuthirai Songs Review

இரும்புக்குதிரை இசை விமர்சனம் 

கோவை ஆவீ 


அதர்வா, ப்ரியா ஆனந்த், லக்ஷ்மி ராய் இணைந்து நடித்து வெளிவர இருக்கும் படம் இரும்புக்குதிரை. இதன் ஒலித்தகடு சில நாட்கள் முன் வெளியிடப்பட்டது. சோனி ம்யுசிக் வெளியிட்டிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

 

1. பெண்ணே பெண்ணே - தாமரையின் தீந்தமிழ் சொற்களில் காதல் ரசம் சொட்டும் பாடல் பெண்ணே பெண்ணே. GV பிரகாஷ், யாழினி மற்றும் பவதாரிணியின் குரல்களில் மெலிதாய் ஒலிக்கும் மெல்லிசை.  பாடலின் இடையே ஒலிக்கும் கீபோர்ட் இசை ஒரு தாலாட்டு. ஆறு நிமிடங்கள் நீண்டு ஒலித்த போதும் கேட்பதற்கு இசைவாய் இருக்கும் இதுவே ஆல்பத்தின் சிறந்த பாடல்.

 

2. "அங்கே இப்போ என்ன செய்கிறாய்"  - விஜயப்ரகாஷ்,முக்தா மற்றும் மானஸி பாடியிருக்கும் பாடல். ஊடல் கொண்டு செல்ல எத்தனிக்கும் காதலியை கவர காதலன் பாடுவது போல் வரும் துள்ளல் பாடல். பயணத்தில் கேட்டு ரசிக்க உகந்த பாடல். இசையின் ஆதிக்கம் நிறைந்த இந்த பாடல் பல முறை கேட்டலுக்கு பின் ரசிக்கலாம். 

 

3.  ப்ரியா ஹிமேஷின் மலையாள வரிகளுடன் துவங்கும் குத்துப் பாடல் "பாண்டிச்சேரி வழியிலே"  இவருக்கு இணையாய் அசத்தலாய் GV  பிரகாஷின் தாயார் ரெஹைனா பாடியிருக்கும். நாதஸ்வரம், புல்லாங்குழல், டிரம்ஸ் என ஒலிக்கும் இந்த மாடர்ன் குத்து பாடல் இளைஞர்களை கவரலாம் . 

 

4. "அலைபாயும்" -  தாமரையின் எழுத்துகளில் ஆண்ட்ரியா பாடியிருக்கும் பாடல் என்பதே கொஞ்சம் வித்தியாசமான கூட்டணி தான். கொஞ்சம் ஹாரிஸ் ஜெயராஜின் "என்னைக் கொஞ்சம் மாற்றி" பாடலின் சாயலில் கிடார் இசை, ஸ்டைல் ப்ளஸ் விறுவிறு பாடல். இடையில் ஒலிக்கும் ஆங்கில வரிகள, விஜயபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியாவின் குரல் ஆளுமை, என இத்தனை இருந்தும் இந்த பாடல் ஏனோ கேட்கும் படியாக இல்லை .  

 

5. "ஹலோ பிரதர்"- ஆல்பத்தின் பார்ட்டி சாங், சின்னப்பொண்ணுவின் குரலில் கொஞ்சம் நாட்டுப்புற இசையும், சுசித்ராவின் ஹை-பிட்ச் டிஜிட்டல் குரலையும் ஒரு புள்ளியில் இணைத்து இசை ஜாலம் செய்திருக்கும் ஜீவியின் இசை பேசப்படும். படமாக்கப்படும் விதத்தில் இது ரசிகர்களையும் கவரலாம்.

 

மொத்தத்தில் இரும்புக்குதிரை - ஜீவி என்னும் ஜாக்கி இருந்தும் இந்த குதிரை நொண்டும் குதிரையாகவே உள்ளது..!

 

Rating: 5/10

User Comments