Sarabham Songs Review

PUBLISHED DATE : 29/Jun/2014

Sarabham Songs Review

சரபம் இசை விமர்சனம் 

கோவை ஆவீ


சிறு பட்ஜெட் படங்களுக்கு எப்போதும் புதிய இயக்குனர்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருக்கும்  திருக்குமரன் என்டர்டெயின்மேன்ட்ஸ் CV குமார் இந்த  த்ரில்லரை தயாரித்து வழங்குகிறார். இதன் பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போம்

 

1.  இசையமைப்பாளர்   பிரிட்டோ மைக்கேல் மற்றும் ஆண்ட்ரியா  பாடியிருக்கும் பாடல்  "புதிதாய் ஒரு இரவில்"  - GKB யின் நல்ல தமிழ் வரிகளை ரசிக்க விடாமல் இசையின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் இந்தப் பாடலில் கீபோர்டையும் , கிடாரையும் தாண்டி நம்மை ஈர்ப்பது ஆண்ட்ரியாவின் மின்சார குரலே..   

 

2.  "நேரம்" -  நடப்பவை எல்லாவற்றிற்கும் நேரம் தான் காரணம் என்பதை கூறும் பாடல். த்ரில்லர் படத்துக்குரிய எபெக்டை கொடுப்பது ப்ரிட்டோவின் இசையும், குறிஞ்சி பிரபுவின் வரிகளும் மட்டுமல்ல,  ஏற்ற இறக்கங்களுடன் உஷா உதூப்பின் கம்பீர குரலும் தான். 

 

3"போதையில் பாதை மாறும்" - அந்தோணி தாசன் மற்றும் பிரிட்டோ மைக்கேல் இணைந்து பாடியிருக்கும் பாடல் இது. இடையில் இடைவிடாது ஒலிக்கும் வீணை இசை விறுவிறுப்பான பாடலுக்கு மெருகேற்றுகிறது.

 

4. "தீம்" இசை உள்பட இசையில் புதுமுகம் என்ற சாயல் இல்லாமல் பார்த்துக் கொண்ட மைக்கேல் பிரிட்டோவின் மற்றுமொரு விறுவிறுப்பான இசை வேட்டை.

 

எல்லா பாடலும் ஒரே மாதிரி இருந்தாலும், திரையில் பார்க்கையில் நிச்சயம் கதை ஓட்டத்தை விரட்டும் விதமான பாடல். இந்த சரபம் சிங்கத்தை கொல்லுமா, திரையில் ரசிகர்கள் மனதை வெல்லுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..


Rating : 5.5/10

Listen to Sarabham Songs

User Comments