Pencil Songs Review

PUBLISHED DATE : 25/Feb/2015

Pencil Songs Review

பென்சில் - இசை  விமர்சனம் 

கோவை ஆவீ 


இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் ஸ்ரீதிவ்யாவுடன் நாயகனாக அறிமுகமாக இருந்த படம். சில தடங்கலுக்கு பிறகு இரண்டாவது படமாக விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்திற்கு இசையும் இவரே. இதன் பாடல்கள்


"யாரைப் போலும் இல்லை" - ஜீ.வி பிரகாஷ் தான் இசையமைக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடலை பாடுவது வழக்கம். "முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்தில் வரும் "மழை பொழியும்" பாடல் சாயலில் அமைந்திருக்கும் இந்தப் பாடலை பாடியதுடன் இளைஞர்களை கவரும் துறுதுறு இசையை கொடுத்திருப்பது சிறப்பு. காதலின் மேன்மையை தெள்ளத் தெளிவான தமிழில் உணர்த்தும் தாமரையின் வரிகள் இந்தப் பாடலின் ப்ளஸ். பள்ளி மாணவர்களின் வகுப்பறை அட்டகாசங்களை அழகாக பட்டியிலிடும் பாடல்


"Why Machi Why" பள்ளியின் கட்டுப்பாடுகள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே என்ற மெசேஜையும் அழுத்தமாக சொல்லியதற்கு அருண்ராஜா மற்றும் காமராஜிற்கு ஒரு "ஓ" போடலாம். திப்பு, ஸ்ரீஹரி பள்ளி மாணவர்களின் குரல் போலல்லாமல் இருப்பது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.

 

"கண்களிலே" - மெல்லிய கிடார் இசையுடன் துவங்கும் இந்தப் பாடலில் ஸ்ரேயா கோஷலுடன் ஜாவேத் அலி பாடுகையில் கண்களை ரசித்துக் கேட்க வைக்கிறது. தாமரையின் வரிகளோடு இழைந்தோடும் தபலா இசையும் நல்ல கவிதை.

 

"LED கண்ணாலே" - ஹரிஹரசுதன், மாளவிகா சுந்தரின் குரல்களில் குத்துப் பாடல் ஸ்டைலில் ஒலிக்கும் இந்தப் பாடலை முதல்முறை அவ்வளவாக ஈர்க்காவிட்டாலும் ஓரிரு முறை கேட்ட பின்பு நெஞ்சம் மெர்சலாவது மட்டுமல்லாமல் அரங்கில் ரசிகர்கள் ஆட்டத்துடன் ரசிக்கப் போவது உறுதி.

 

பென்சில் - அவ்வளவு ஷார்ப்பாக இல்லை.

Rating: 2.5/5

User Comments